
வெறுப்பு
| க.ராஜ்குமார் - சென்னை |
அந்த பெண்ணின் முலையில் ஒரு
மழைத்துளி பட்டுத் தெரித்தது
முத்தமாகவோ தற்கொலையாகவோ இருக்கலாம்
நான் ஒருவனே சாட்சி அது
தற்கொலை நிகழ்வாயின்.
தெரிந்த துளியிடம் நான் கேட்க வேண்டியெதெல்லாம்
அது புகுந்து வந்த
மேகத்தின் நிறத்தையும்
அவ்வளவு உயரத்தில் இந்த
பிரபஞ்சத்தின் தோற்றத்தையும்
அசிங்கத்தையும்
அந்த முலையின் வலிமையையும்
நிச்சயமாக கன்னியாவென்றும்
சட்டென விரித்தால்
நிறுத்திக்கொண்டேன் கற்பனையை
குடைகளை வெறுக்கிறேன்.

2 comments:
நீங்க 'காட்சி'யில் கண்ட அதே
கனவு துரத்தியா
இல்லை வெறும் முலை துருத்தியா
அதே கனவு துரத்தி தான் நண்பரே
Post a Comment