
ஒருவேளை நகுலன் உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் ஒருமுறையாவது அவரை சந்தித்து அவர் கைகளைப் பிடித்து வார்த்தை ஏதும் பேசாமல் கண்ணீரால் உரையாடிருப்பேன். என் மொழி நகுலனுக்கு புரிந்திருக்கும் ஏனென்றால் நான் பேசுவதே நகுலனின் மொழியில் தான். உருண்டோட தயாராக இருந்தன கண்ணீர், நான் நகுலன்-ஐ முதன் முதலாக அந்த இரவில் படித்தபொழுது. அவற்றில் சில.
நான் இறந்த பிறகு
எனக்கு அஞ்சலி கூட்டங்கள்
நடத்த வேண்டாம், ஏனென்றால்
என்னால் வர முடியாது.
-------------------------------
ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
-------------------------------
எனக்காக யாரும் இல்லை
நான் கூட.
-------------------------------
ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம், மஹா மௌனம்.
-------------------------------
இருப்பதற்கென்று வருகிறோம்
இல்லாமல் போகிறோம்.
-------------------------------
உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு.
--நகுலன்

No comments:
Post a Comment