The Dream Chaser

Wednesday, May 5, 2010

பெரிய வீதி


எப்பொழுதுமே சராசரியாக என் இனத்தைச்சேர்ந்த நானூறுபேரின் நடமாட்டமாவதிருக்கும் அந்த தெருவில். முகத்தை பார்த்தே அந்தஸ்தை அறிந்துகொள்ளும் அறிவை,திறனை அல்லது அந்த மாயாஜாலப் பாடத்தை
என் சமூகம் எனக்கு கற்பித்துள்ளது. என்னிடம் 8 ரூபாய் இருந்தது. அந்த தெருவிலிரிக்கும் பல டீ கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ள கடையின் முகப்பில் நின்று "ஒரு கிங்ஸ்" என்றேன். புகைக்க ஆரம்பித்தேன். ஒரு சிறுவன் என் கால்களை சுரன்டியபடியே "நா ஒரு டீ வாங்கிதா நா" என்றான். இம்பது காசு மட்டுமே கொடுத்தேன், பின் கொடுத்திருக்க கூடாதோ என்று யோசித்தேன். இந்த தெருவை கடந்தால்
எல்லாவிதமான மனிதர்களுக்கும் தேவையான,எல்லா விதமான பொருட்களும் கிடைக்கக்கூடிய,எல்லா விதமான கடைகளும் உண்டு. அந்த எல்லா விதமான கடைகளும் இருக்கக்கூடிய அந்த பெரிய தெருவை அடைய, எல்லா விதமான மக்களும் இந்த தெருவை பயன்படுத்துவார்கள். அந்த எல்லா விதமான மக்களுக்கு நடுவே அந்த சிறுவன் நடந்து சென்றான். என்னை கடந்து செல்பவர்கள் அவர்களுக்கு தேவாயானவற்றை வாங்குவதற்கு
தேவாயான பணத்தை மட்டுமே எடுத்து செல்கிறார்கள் என்பதை என்னால் கனிக்க முடிந்தது. எப்படி என்று நீங்கள் ஆச்சரியப்படக்கூடாது. ஏனென்றால் என்னால் அது முடியும். சட்டென்று மல்லிகை மனம் பளரென்று ஆரைந்ததுபோல் என்னை அவள் கடந்து சென்றாள்.அவள் ஒரு ஐட்டெம் என்பதை என்னால் கனிக்க முடிந்தது. கடந்து செல்லும் ஒவ்வொருவரின் முகமும் ஒரு சிறுகதை. சிறுகதைகளை வாசித்துக்கொண்டே
இருந்தேன். நெருப்பு விரலை சுட்டுவிட்டது. வீரலிடையில் சிறை வைத்திருந்த சிகரெட்டை மறந்துவிட்டேன். நடக்கலாமென்ற் நினைத்து முதலடி வைத்தேன், "தம்பி,கிங்கஸ்கூ காசு" என்று இழுத்தார் கடைக்காரர்.. அந்த கடையை நான் தேர்வு செய்தது தப்பென்று தோன்றியது. "சாரி, மறந்துட்டேங்க" என்றேன். நாலு ரூபாய் இம்பது காசை கொடுத்தேன். உடனே அந்த இடத்தை விட்டு போக வேண்டாமென்று தோன்றியது.
"அண்ணே ஒரு ஃபில்டர் என்றேன்", இம்முறை இரண்டு ரூபாய் நாணயத்தை அவர் முன் நீட்டிய படியே கேட்டேன். புகைத்துக்கொண்டே மீண்டும் சிறுகதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். எந்த கதையிலும் தேவைக்கு அதிகமான வரிகளோ, பூசல்களோ எதுவுமில்லை என்பதையும் கனிக்க முடிந்தது. அப்படி ஏதாவது இருந்திருந்தால் அதில் திருத்தம் செய்வது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது. என்னிடம் ஒரு ரூபாய்
இருந்தது. எனக்கு பீடி பிடிக்கும் பழக்கமில்லை. நடு மண்டையில் நங்கென்று கொட்டி மல்லுக்கு கூப்பிட்டது சூரியன். அந்தத்தெருவை விட்டுச் செல்லலாமென்று நடக்க ஆரம்பித்தேன். அதே சிறுவன் காலை சுரண்டினான். அந்த ஒரு ரூபாயாயும் அவனுக்கே கொடுத்தேன். அவன் ட்ரௌஸர் பாக்கெட் சில்லறைகளால் வீங்கி இருந்ததை கவனித்தேன். எப்படியும் முப்பது ரூபாயாவது இருந்திருக்கும் என்பதை
என்னால் கனிக்க முடிந்தது. கோபம்,தியாகம்,ஏம்மாற்றம்,வெறுப்பு,பொறாமை இந்த எல்லா உணர்வுகளுக்கும் சம உரிமை கொடுத்து என் மனதிலும்,முகத்திலும் பரவவிட்டபடியே மீண்டும் நடந்தேன். சட்டென்று திரும்பி பார்த்தேன். அந்த சிறுவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான், ஒருவிதமான புன்னகையுடன். அவன் என்னை முற்றிலிமாக வாசித்து விட்டான் என்பதயும் என்னா
ல்கனிக்க
முடிந்தது.


-க. ராஜ்குமார்

1 comment:

Anonymous said...

excellent ... particlarly " every crossing face is a short story !!! "

Post a Comment